சுடச்சுட

  

  செங்கத்தை அடுத்த தோக்கவாடி, கொல்லைகொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழநியின் மனைவி ரத்தினம்மாள் கடந்த வாரம் மரணமடைந்த நிலையில், அவரின் கண்கள் ஆரணி அகர்வால் மருத்துவமனைக்கும், உடல் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காகவும் வழங்கப்பட்டன.
  இதைத் தொடர்ந்து, திங்கள்
  கிழமை ரத்தினம்மாள் படத்திறப்பு விழா அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, ரத்தினம்மாள் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
  நிகழ்ச்சியில் வேலூர் உதவும் உள்ளங்கள் தலைவர் சந்திரசேகரன், செங்கம் மக்கள் மைய ஒருங்கிணைப்பாளர்கள் சக்கரபாணி, வெங்கட்ராமன், முருகையன், முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai