சுடச்சுட

  

  செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் திங்கள்கிழமை கருத்தரங்கு  நடைபெற்றது.
  கருத்தரங்கில் இயற்பியல் துறை பேராசிரியர் சென்னகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய தலைமை அலுவலர் விஜயகோபால் கலந்துகொண்டு, அணுக்கரு உலை, அதன் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விளக்கிக் கூறினார். இதைத் தொடர்ந்து, மருத்துவர் ரவிசங்கர், திருவண்ணாமலை அரசு கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன் ஆகியோர் இயற்பியல் துறை சார்ந்த கருத்துகளை விளக்கினர்.
  நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ரோசரி, கல்லூரிச் செயலர்
  ஜூலியவயலெட், பேராசிரியர்கள் பிரிமாரோஸ், யூஜின்அமலா, லதா, நதியா மற்றும் மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பேராசிரியர் சுகன்யா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai