சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே முயல்களை வேட்டையாட முயன்றவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்த வனத் துறையினர், அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
    சாத்தனூர் வனத் துறை அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையிலான வனத் துறையினர், திங்கள்கிழமை இரவு தண்டராம்பட்டு வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் தப்பியோட முயன்றவரை வனத் துறையினர் பிடித்து விசாரித்தனர்.
    விசாரணையில், பிடிபட்டவர் தண்டராம்பட்டை அடுத்த கொலமஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் (53) என்பதும், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி மூலம் முயல்களை வேட்டையாட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, வனத் துறையினர் ராமஜெயத்துக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அவரிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai