Enable Javscript for better performance
1.28 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.69.51 கோடி வறட்சி நிவாரணம்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினா- Dinamani

சுடச்சுட

    

    1.28 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.69.51 கோடி வறட்சி நிவாரணம்: அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்

    By DIN  |   Published on : 08th March 2017 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69.51 கோடி வறட்சி நிவாரணத் தொகையை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதற்கான விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 1,28,244 விவசாயிகளுக்கு ரூ.69.51 கோடி வறட்சி நிவாரணத் தொகையை வழங்கினார்.
    நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை மூலம் 1,19,421 விவசாயிகளுக்கும், தோட்டக்கலைத் துறை மூலம் 8703 விவசாயிகளுக்கும், பட்டு வளர்ச்சித் துறை மூலம் 120 விவசாயிகளுக்கும் என மொத்தம் 1,28,244 விவசாயிகளுக்கு
    ரூ.69 கோடியே 51 லட்சத்து
    3 ஆயிரத்து 313 நிவாரணம் வழங்கப்பட்டது.
    மேலும், வேளாண் துறை சார்பில் 63 விவசாயிகளுக்கு ரூ.4.33 லட்சம் மதிப்பிலான உளுந்து செயல் விளக்கம், தெளிப்பு நீர் பாசனக் கருவி, மழைதூவான் கருவி, விசைத்தெளிப்பான்கள், தோட்டக்கலைத் துறை சார்பில் 16 விவசாயிகளுக்கு ரூ.38 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விதைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் தண்டராம்பட்டு வட்டம், கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 25 பேருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
    விழாவில், முன்னாள் வணிகவரி ஆலோசனைக் குழு உறுப்பினர் பெருமாள் நகர் கே.ராஜன் உள்பட கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai