சுடச்சுட

  

  திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
  விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். செயலர் ம.பரத் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பா.ஹேமாவதி வரவேற்றார். மகளிர் தினவிழாவையொட்டி, கல்லூரி மாணவிகள் உணவுத் திருவிழாவை நடத்தினர்.
  இதில், பாரம்பரிய உணவுப் பொருள்கள் முதல் இன்றைய நவீன துரித உணவுகள் வரை பல்வேறு உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் கீதா நாகராஜன், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கிப் பேசினார். மேலும், உணவுத் திருவிழாவையும் அவர் பார்வையிட்டார்.
  இதைத் தொடர்ந்து, மாணவிகளின் பல்வேறு திறமைகளை வெறிக்கொணரும் வகையில் நாடகம், மெளன மொழி, விளம்பரம் செய்தல், முக அலங்காரம், சிகை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும், பேராசிரியைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள், வாகனம் ஓட்டுதல் பயிற்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன. விழாவில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
  ஆரணி: இதேபோல, ஆரணி எஸ்பிசி பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வி.திருநாவுக்கரசு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம், கல்லூரியின் சிறப்பு அலுவலர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியை எஸ்.சோபனா வரவேற்றார்.
  சிறப்பு விருந்தினராக சென்னையைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளருமான டி.லாவண்யாசோபனா கலந்துகொண்டு, மகளிரால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்றும், மகளிர் செய்த சாதனைகள் குறித்தும் பேசினார். மேலும், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, ரங்கோலி, கை அலங்காரம், ஆடல், பாடல் மற்றும் முடி அலங்காரம் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்பிஏ துறைத் தலைவர் கே.சிவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரி: இதேபோல, ஆரணி ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாணவிகளின் நடன நிகழ்ச்சி, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  மேலும், பெண்ணுரிமை, துணிவே துணை எனும் தலைப்புகளில் கவிதைப்போட்டி, பெண்களின் சாதனைச் சரித்திரம், சமுதாய மாற்றத்தில் பெண்களின் பங்கு எனும் தலைப்புகளில் கட்டுரைப்போட்டி, இன்றைய சமுதாயச்சூழல் பெண்களுக்கு நெருக்கடியா நிம்மதியா எனும் தலைப்பில் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன. கல்லூரிச் செயலர் ஏ.சி.ரவி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வையாபுரிராஜா வரவேற்றார். இதில் உதவிப் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai