சுடச்சுட

    

    தண்டராம்பட்டு அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியதாக இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
    தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் வனப் பகுதியில் வன அலுவலர் வசந்த் தலைமையிலான வனத் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
    விசாரணையில் அவர்கள், சாத்தனூரை அடுத்த ரோடுபாளையம் கிராமம் குமார் (48), ஆறுமுகம் (35) என்பதும், இருவரும் காட்டுப் பன்றியை வேட்டையாடி சமைத்துச் சாப்பிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவருக்கும் வனத் துறையினர் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai