சுடச்சுட

  

  ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம்

  By DIN  |   Published on : 09th March 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழும் சந்தேகங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தக் கோரி, திருவண்ணாமலையில் ஓபிஎஸ் அணியினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ஜெயலலிதா மரணத்தில் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை போக்கும் வகையில் நீதி விசாரணை நடத்த கோரிக்கை விடுத்து வருகிறார்.
  இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணத்தில் நீடிக்கும் சந்தேகங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தக் கோரி, தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணியினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை, கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி வைத்தார்.
  போராட்டத்தின்போது, ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு விடை காண நீதி விசாரணை நடத்தக் கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, வடக்கு மாவட்டப் பொருளர் சுபாஷ் சந்திரபோஸ், வடக்கு மாவட்ட முன்னாள் செயலர் பையூர் சந்தானம், ஆரணி ஒன்றியச் செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், அரையாளம் வேலு, ஆரணி நகரச் செயலர் ஏ.அசோக்குமார், செய்யாறு முன்னாள் நகரச் செயலர் கோபால், திருவண்ணாமலை நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் ஜி.முருகன் உள்பட பல ஆயிரம் ஓபிஎஸ் அணியினர், பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
  போக்குவரத்து மாற்றம்: காலை 10 மணிக்குப் பிறகு உண்ணாவிரதத்துக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. எனவே, பெரியார் சிலையில் இருந்து அம்பேத்கர் சிலை வரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
  பேருந்துகள் அனைத்தும் வேறு வழியில் திருப்பிவிடப்பட்டன. உண்ணாவிரதப் போராட்டத்துக்காக அம்பேத்கர் சிலை எதிரில் இருந்து பெரியார் சிலை வரை பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai