சுடச்சுட

  

  தாய், சேய் நல விழிப்புணர்வு ஊர்வலம்: சார் - ஆட்சியர் தொடக்கி வைத்தார்

  By DIN  |   Published on : 09th March 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செய்யாறை அடுத்த எச்சூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தாய் - சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடக்கி வைத்தார்.
  புதுச்சேரி மற்றும் இராமநாதபுரம் கள விளம்பர அலுவலகங்கள், செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், சினம் தொண்டு நிறுவனம் ஆகியன இணைந்து எச்சூர் கிராமத்தில் தாய் - சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம் குறித்த விழிப்புணர்வு முகாம், ஊர்வலத்தை நடத்தின.
  இதில் முகாமைத் தொடக்கி வைத்த சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசுகையில், தமிழகத்தில் ரூபெல்லா, தட்டம்மை தடுப்பூசி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். தாய்மார்கள் 15 வயதுக்கு உள்பட்ட தங்களது குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.
  இதைத் தொடர்ந்து, புதுச்சேரி கள விளம்பர உதவி இயக்குநர் தி.சிவக்குமார், குழந்தைகள், கர்ப்பகால பெண்களின் மரணங்களை குறைக்க அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வி.கோவிந்தன், திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்படும் சுகாதார சேவைகள் குறித்தும், வேலூர் மண்டல பூச்சியியல் குழுவின் முதுநிலை பூச்சியியல் வல்லுநர் டாக்டர் கி.கோபாலரத்தினம், கொசுவால் பரவும் நோய்கள் குறித்தும் பொதுமக்களிடையே விளக்கிக் கூறினர்.
  நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் எம்.அருண்குமார், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் பா.ரா.ஆரோக்கிய மேரி, மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கோ.மணிவர்மா, வட்டார வளர்ச்சி அலுவலர் கு.உதயகுமார், சினம் தொண்டு நிறுவன இயக்குநர் இராம.பெருமாள், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே.பி.அருச்சுனன், மாவட்ட பயிற்சிக் குழு மருத்துவர் யோகானந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  முன்னதாக செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தாய் - சேய் நலம் மற்றும் வளர் இளம் பருவத்தினர் நலம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் தொடக்கி வைத்தார். மேலும், ஆரோக்கியக் குழந்தைகள் போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி கள விளம்பர உதவியாளர் மு.தியாகராஜன், சென்னை கள விளம்பர உதவியாளர் எஸ்.ஆர்.சந்திரசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai