சுடச்சுட

  

  தேவிகாபுரம், மேல்புழுதியூர் கோயில்களில் கும்பாபிஷேகம்

  By DIN  |   Published on : 09th March 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீரபத்திரசுவாமி, பைரவசுவாமி கோவில்கள், செங்கம் அருகே மேல்புழுதியூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் ஆகியவற்றில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
  தேவிகாபுரம் ஊராட்சியில் கனககிரீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்ட வீரபத்திரசுவாமி, பைரவசுவாமி கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, புதிய பிம்பங்கள் கண் திறத்தல், பூர்ணாஹுதி ஆகியவை நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 2-ஆம்கால பூஜை, நாடி சந்தானம், யாத்ரதானம், கலச புறப்பாடு ஆகியவை நடத்தப்பட்டு, பின்னர் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  இதைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜை செய்யப்பட்டது. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
  மேல்புழுதியூர்: இதேபோல, மேல்புழுதியூர் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கோயிலில் கணபதி பூஜை, கோ பூஜை, கலச பூஜை, முதல்கால யாக பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டன.
  இதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 10 மணியளவில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் மேல்புழுதியூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  பின்னர், சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் அம்மன் வீதியுலா வந்தார்.
  காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் முக்கியப் பிரமுகர்கள் செய்திருந்தனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai