சுடச்சுட

  

  சேத்துப்பட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் போளூர் தொகுதி தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்கள் அவரிடம் பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.
  சேத்துப்பட்டு, நெடுங்குணம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து எம்எல்ஏ கே.வி.சேகரன் ஆய்வு செய்தார்.
  அப்போது, எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 3 மாத காலமாக நியாயவிலைக் கடைகளில் பாமாயில் வழங்கப்படுவதில்லை. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் தான் வழங்கப்படுகிறது. அரிசி, சர்க்கரை அளவு குறைவாக உள்ளது.
  தேவையற்ற பல்வேறு பொருள்கள் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்கினால்தான் அத்தியாவசியப் பொருள்களை வழங்குகின்றனர். அதுவும் குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே வழங்குகிறார்கள்.
  அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளதால் பொருள்களை வாங்க சிரமமாக உள்ளது. எனவே, குடும்ப அட்டைகளை பிரித்து, சேத்துப்பட்டு அருந்ததியர்பாளையம் பகுதியில் கூடுதல் கடை அமைக்க வேண்டும். மேலும், அனைத்துப் பொருள்களும் தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏவிடம் பொதுமக்கள் முறையிட்டனர். இதையடுத்து, நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் எம்எல்ஏ கே.வி.சேகரன் விசாரித்தபோது, சேமிப்புக் கிடங்குகளில் இருந்து குறைவான அளவிலேயே பருப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. அவற்றை குடும்ப அட்டைதாரர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறோம் என்றனர்.
  பின்னர், செய்தியாளர்களிடம் எம்எல்ஏ கூறியதாவது: தமிழக அரசு கடந்த 3 மாத காலமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அத்தியாவசியப் பொருள்களை வழங்கக் கோரியும், தேவையற்ற பொருள்களை வாங்க வற்புறுத்துவதைக் கண்டித்தும் வரும் 13-ஆம் தேதி போளூர் தொகுதியில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
  இதில் பொதுமக்கள் பெரும்பாலானோர் பங்கேற்பார்கள் என்றார். ஆய்வின்போது, திமுக நகரச் செயலர் இரா.முருகன், நெடுங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை, பேருராட்சி முன்னாள் துணைத் துலைவர் தினகரன், இளங்கோ, அரிஷ் சேகர், ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai