சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 115 மையங்களில் 33 ஆயிரத்து 369 மாணவ, மாணவிகள் எழுதினர்.
  தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதன்கிழமை முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 16 ஆயிரத்து 843 மாணவர்கள், 16 ஆயிரத்து 626 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 369 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
  இவர்களுக்காக திருவண்ணாமலை, ஆரணி, போளூர், செய்யாறு உள்பட மாவட்டம் முழுவதும் 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல் நாளான புதன்கிழமை தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்தனர். தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அமைக்கப்பட்டு இருந்த பறக்கும்படை அதிகாரிகளும் தொடர்ந்து தேர்வு மையங்களில் ரோந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai