சுடச்சுட

  

  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆரணி பட்டு கைத்தறி பூங்கா சார்பில், ஆரணியை அடுத்த ஒண்ணுபுரத்தில் பெண் நெசவாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
  பாரம்பரிய தொழில் திறனை அங்கீகரித்தல் திட்டத்தின் கீழ் 7 நாள்கள் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியை ஒண்ணுபுரத்தைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளர்களான பி.வி.புவனேஸ்வரி, ஜி.தேவிகா, என்.ராஜேஸ்வரி, பி.மகேஸ்வரி ஆகியோர் தொடக்கி வைத்து, பட்டுச் சேலையின் தரம், உற்பத்தித் திறன், பெண் தொழில் முனைவோர் குறித்து உரையாற்றினர். இதில், அரசு மருத்துவர் எம்.பிரபவராணி கலந்துகொண்டு, ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்களின் பங்கு, முக்கியத்துவம் குறித்து விளக்கிக் கூறினார். பெங்களூரைச் சேர்ந்த பயிற்சியாளர் எம்.கோகிலா, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமைப் பண்புகள், நேர மேலாண்மை மற்றும் குழுவாக பணிபுரிதல் உள்ளிட்ட மென்திறன்கள் குறித்து பேசினார். ஆரணி பட்டு கைத்தறி பூங்கா இயக்குநர் எச்.ரகுபதிராமசாமி, பயிற்சியின் சிறப்புகள் குறித்து பேசினார்.
  இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai