சுடச்சுட

    

    திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், 114-ஆவது மாத திருக்குறள் மலை வலம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு, மாவட்ட கவிஞர் பேரவைச் செயலர் நல்ல.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருக்குறள் தொண்டு மையச் செயலர் சண்முகம், உலக தமிழ்க் கழக ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். மகாபாரத சொற்பொழிவாளர் மணியம் கொடியசைத்து வைத்து, மலை வலம் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.
    இதைத் தொடர்ந்து நடைபெற்ற மலை வலம் நிகழ்ச்சியில் அன்பழகன், வாசுதேவன், சேதுமாதவன், சுப்பிரமணி, கமலக்கண்ணன், செல்வராசு, ஜெயப்பிரகாஷ், மகாதேவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai