சுடச்சுட

    

    வாணியம்பாடியில் மின்சாரம் பாய்ந்ததில், பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
    வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (13), தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் அங்கிருந்து வீட்டுக்கு சுரேந்தர் திரும்பிக் கொண்டிருந்தார்.
    அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி திடீரென அறுந்து சுரேந்தர் கழுத்தில் விழுந்தது.
    இதில், மின்சாரம் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai