சுடச்சுட

  

  சேத்துப்பட்டு திவ்யா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி, முன்னூர்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் புதன்கிழமை உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
  சேத்துப்பட்டு - செஞ்சி சாலையில் உள்ள திவ்யா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தாளாளர் பா.செல்வராஜன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் டாக்டர் செந்தில்குமார், துணைத் தலைவர் பொறியாளர் பிரவின்குமார், நிர்வாக அலுவலர் சீனிவாசராகவன், பேராசிரியர் தாமஸ் அப்பாதுரை சுகிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர் மாலதி வரவேற்றார்.
  விழாவில் தலைமை உரையாற்றிய தாளாளர் பா.செல்வராஜன் பேசுகையில், உலக அரங்கில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களாக திகழ்கின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவிகளாகிய நீங்களும் சாதிக்க பிறந்தவர்கள் தான். படிக்கும் காலத்தில் மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்தி, பட்டங்களைப் பெறுவதுடன், பல துறைகளில் சாதனை படைத்து, இந்த நாட்டுக்கும், வீட்டுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.
  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எழுத்தாளர் தமயந்தி, பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி காயத்ரி நன்றி கூறினார்.
  முன்னூர்மங்கலம் பள்ளியில்...: இதேபோல, புதுப்பாளையம் ஒன்றியம், முன்னூர்மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
  விழாவில் புதுப்பாளையம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சம்பத் கலந்துகொண்டு, பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் பெண்களின் சாதனைகள் குறித்து மாணவிகளிடையே பேசினார்.
  இதைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்றுநர் லென்கிரேசி, அன்னை தெரசா, சரோஜினிநாயுடு, கல்பனா சாவ்லா, ஜான்சிராணி ஆகியோரின் சாதனைகள் குறித்து தெரிவித்ததுடன், பள்ளி மாணவிகளும் இவர்களைப்போல சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
  நிகழ்ச்சியில் 6,7,8-ஆம் வகுப்பு மாணவிகள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் பழநி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் வெள்ளச்சிசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai