சுடச்சுட

  

  குடிநீர்ப் பிரச்னை: வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

  By DIN  |   Published on : 10th March 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடித் தீர்வு காணக் கோரி, திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், சின்னகாங்கியனூர் ஊராட்சி, சம்பந்தனூரில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
  எனவே, வேறு வழியின்றி அருகே உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். வறட்சி காரணமாக அந்தக் கிணற்றிலும் தற்போது நீர்மட்டம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது.
  இந்நிலையில், குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணக் கோரி, பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை காலை திருவண்ணாமல வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயிலில் காலிக் குடங்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் பிரச்னையைத் தீர்க்காத நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
  இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.கே.லட்சுமி நரசிம்மன், காந்திமதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாள்களில் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai