Enable Javscript for better performance
சாராய வழக்குகளில் பிடிபட்ட 43 வாகனங்கள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    சாராய வழக்குகளில் பிடிபட்ட 43 வாகனங்கள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம்

    By DIN  |   Published on : 10th March 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய வழக்குகளில் பிடிபட்ட 43 வாகனங்கள் ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
    திருவணணாமலை மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பதியப்பட்ட சாராய வழக்குகளில் தொடர்புடைய 60 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்களின் ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ஏலத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
    திருவண்ணாமலை மாவட்ட கலால் உதவி ஆணையர் எஸ்.பானு, வேலூர் மாவட்ட அரசு தானியங்கிப் பணிமனை பொறியாளர் தேவப்பிரியா ஆகியோர் முன்னிலையில் தலைமைக் காவலர் கே.குமரன் வாகனங்களை ஏலம் விட்டார். ஏலத்துக்கு வைக்கப்பட்டிருந்த 60 வாகனங்களில் ஒரு கார், 42 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
    43 வாகனங்களும் மொத்தம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 521-க்கு ஏலம் போனது. மீதமுள்ள வாகனங்கள் அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஏலம் விடப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai