சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
  விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஜோதிலிங்கம் (36). கண்டாச்சிபுரத்தை அடுத்த அருபராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (57). நண்பர்களான இருவரும் பைக்கில் புதன்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தனர்.
  வெறையூரை அடுத்த டி.கல்லேரி கிராமம் அருகே வந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் வந்தாராம். அவர் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது, எதிர்பாராதவிதமாக பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  
  இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதன், அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து, வெறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai