Enable Javscript for better performance
சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு பரிசு- Dinamani

சுடச்சுட

    

    சிறந்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த பொறியியல் கல்லூரி மாணவருக்கு பரிசு

    By DIN  |   Published on : 10th March 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
    திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் அண்மையில் இயந்திரவியல் துறையில் மாற்றங்களும், முன்னேற்றங்களும் என்ற தலைப்பில் பன்னாட்டு அளவிலான மாநாடு நடைபெற்றது.
    இதில், திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
    வெல்டிங் துறையில் புதிய முயற்சியாக இருவேறு பண்புகளைக் கொண்ட 2 உலோகங்களை உருக்காமல், வெல்டிங் செய்து இணைப்பது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறையின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் உலோக இணைப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகளை கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் அரவிந்த்ராஜ், பேராசிரியர் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் சமர்ப்பித்தனர்.
    இந்த ஆய்வுக் கட்டுரை சிறந்த ஆய்வுக் கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு வழங்கப்பட்டது.
    பரிசு பெற்ற மாணவர், பேராசிரியரை கல்லூரி இயக்குநர் பொன்.முத்து, முதல்வர் டி.தண்டபாணி, துறைத் தலைவர் பி.மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai