சுடச்சுட

  

  வந்தவாசி, ஆரணி, செய்யாறு ஆகிய பகுதிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
  வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் சார்பில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணிக்கு வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் தலைமை வகித்தார்.
  வந்தவாசி முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் கா.நிலவரசன், பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். வந்தவாசி வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி கோட்டை மூலை, பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாக நகராட்சி அலுவலகம் சென்றடைந்தது.
  இதில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் எஸ்.திருமலை, மூர்த்தி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
  ஆரணி: ஆரணியில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணியை இடர்பாடு நிவாரண வட்டாட்சியர் சேகர், கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
  வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி, உதவி வட்டாட்சியர் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
  இந்தப் பேரணியில் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம், வடக்குமாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, சந்தை சாலை வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது.
  செய்யாறு: இதேபோல, செய்யாறில் வருவாய்த் துறை சார்பில், சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. விழிப்புணர்வுப் பேரணியை செய்யாறு சார் - ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். செய்யாறு - ஆரணி கூட்டுச்சாலையில் தொடங்கிய பேரணி ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை, சந்தை வழியாக சென்று பெரியார் சிலை அருகே முடிவடைந்தது.
   பேரணியில் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.முரளி, வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai