சுடச்சுட

    

    மாசி மாத பெளர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
    திருவண்ணாமலையில் 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பெளர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.
    இந்த நிலையில், மாசி மாத பெளர்ணமி சனிக்கிழமை இரவு 8.58 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.52 மணி வரை நீடிக்கிறது. இந்த நேரத்தில், திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பெளர்ணமி நாளில் கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai