சுடச்சுட

  

  தையல் தொழிலாளி அடித்துக் கொலை: மனைவி உள்பட நால்வரிடம் விசாரணை

  By DIN  |   Published on : 10th March 2017 08:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை அருகே தையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி உள்பட நால்வரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி ரமேஷ் (35). இவரது மனைவி சரண்யா (30). இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சரண்யா சென்றார்.
  இதையடுத்து, புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் ரமேஷின் வீடு திறக்கப்படவில்லையாம். இதனால் சந்தேகமடைந்த ரமேஷின் தாய், சரண்யா ஆகியோர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனராம். அப்போது, ரத்த காயங்களுடன் ரமேஷ் இறந்து கிடந்தாராம்.
  தகவலறிந்த மங்களம் போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸார் நடத்திய விசாரணையில், ரமேஷ் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
  இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சரண்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்ததாகத் தெரிகிறது.
   இதை ரமேஷ் பல முறை கண்டித்தும், கார்த்திக்குடனான உறவை சரண்யா விடவில்லையாம்.
  இந்த நிலையில் ரமேஷ் கொல்லப்பட்டு இருப்பதால் இந்தக் கொலையில் சரண்யா, கார்த்திக், அவரது உறவினர்கள் ராஜசேகர், சரசு ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, சரண்யா உள்ளிட்ட நால்வரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai