சுடச்சுட

  

  பக்தர்கள் தங்கும் விடுதிக்காக: கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து வழக்கு தொடர முடிவு

  By DIN  |   Published on : 10th March 2017 08:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சோணநதி காட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கு  கிரிவலப் பாதையில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க மலை சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.
  திருவண்ணாமலை மலை சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுவின் பிரசார செயலர் எஸ்.கருணா தலைமை வகித்தார்.
  கூட்டத்தில், திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள சோணநநி காட்டில் 545 மரங்களை வெட்டி விட்டு "யாத்ரி நிவாஸ்' என்ற பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை கைவிட வேண்டும்.
  இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலை நகரின் 50 இடங்களில் "மக்களிடம் செல்வோம்' என்ற தெருமுனைப் பிரசார இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  நகராட்சி அலுவலகம் எதிரே வெள்ளிக்கிழமை (மார்ச் 10) காலை முதல் மாலை வரை கோரிக்கை முழக்க இயக்கம் நடத்த வேண்டும். சனிக்கிழமை (மார்ச் 11) கிரிவலம் வரும் பக்தர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும்.
  545 மரங்களை வெட்டிவிட்டு யாத்ரி நிவாஸ் கட்டுவதை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இதில், பாதுகாப்புக் குழுவின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
  இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை நகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai