சுடச்சுட

    

    விறகுக் கட்டைகள் சரிந்து விழுந்ததில் 2 வயதுக் குழந்தை சாவு

    By DIN  |   Published on : 10th March 2017 08:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசி அருகே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயதுக் குழந்தை மீது விறகுக் கட்டைகள் சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அந்தக் குழந்தை உயிரிழந்தது.
    வந்தவாசியை அடுத்த பொன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (25). இவரது மனைவி மைதிலி (23). இவர்களது மகன் சங்கர் (5), மகள் மணிமேகலை (2). கடந்த 2-ஆம் தேதியன்று வீட்டின் முன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக் கட்டைகளின் அருகே மணிமேகலை விளையாடிக் கொண்டிருந்தார்.
    அப்போது, மணிமேகலை மீது எதிர்பாராதவிதமாக விறகுக் கட்டைகள் சரிந்து விழுந்ததாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
     பின்னர், தீவிர சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிமேகலை புதன்கிழமை உயிரிழந்தார்.
    இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின்பேரில் பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai