சுடச்சுட

  
  agri2

   

  நீர் மேலாண்மைக்காக 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் தெளிப்பு நீர் கருவி, மழைதூவான் கருவிகளைப் பெற அனக்காவூர் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
  அனக்காவூர் வட்டாரத்தில் மானாவாரி சிறப்பு பயறு பெருக்கு திட்டம் 200 ஏக்கரில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மானியத்தில் விதை, விதை நேர்த்தி மருந்து, நுண்ணூட்டக் கலவை, டி.ஏ.பி, ஹைட்ரோ கரைசல், உயிர் உரம் போன்ற இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளன.
  மேலும், நீர் மேலாண்மைக்காக 100 சதவீத மானியத்தில் தெளிப்பு நீர் கருவி, மழைதூவான் ஆகியவை 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
  இவற்றை பெற விரும்பும் அனக்காவூர் வட்டார விவசாயிகள் சிட்டா, அடங்கல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கிப் புத்தக நகல், சிறு விவசாயி சான்றிதழ் ஆகியவற்றுடன் தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai