சுடச்சுட

    

    புதுப்பாளையம் ஒன்றியம், படிஹக்ரகாரம், வந்தவாசி வட்டம், கீழ்வெள்ளியூர் கிராமங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 70 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    புதுப்பாளையம் ஒன்றியம், படிஹக்ரகாரம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பாட்டா, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் திருத்தம், சிறுகுறு விவசாயச் சான்று, பட்டதாரி உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 100-க்கும் மேற்பட்ட மனுக்களை அந்தப் பகுதி பொதுமக்கள் அளித்தனர்.
    மனுக்களை பரிசீலனை செய்த வருவாய்த் துறையினர், தகுதிவாய்ந்த 47 மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா வழங்கினார்.
    முகாமில் மண்டல துணை வட்டாட்சியர் மலர்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், வருவாய் ஆய்வாளர் காசி, கிராம நிர்வாக அலுவலர் ரவிமாராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    கீழ்வெள்ளியூர்: வந்தவாசி வட்டம், மழையூர் உள்வட்டத்துக்கு உள்பட்ட கீழ்வெள்ளியூர் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வந்தவாசி சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் நரேந்திரன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 71 மனுக்கள் பெறப்பட்டன.
    இந்த மனுக்களை பரிசீலித்த வருவாய்த் துறையினர், 23 பேருக்கு குடும்ப அட்டையில் திருத்தம், சிறுகுறு விவசாயச் சான்று உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
    முகாமில் வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், வருவாய் ஆய்வாளர் மலர், கிராம நிர்வாக அலுவலர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai