சுடச்சுட

    

    திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    பிரதோஷத்தையொட்டி, கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
    பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பிரதோஷப் பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் 3-ஆம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai