Enable Javscript for better performance
கலசப்பாக்கம் அருகே மர்மக் காய்ச்சல்: 45 மாணவர்கள் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கம் அருகே மர்மக் காய்ச்சல்: 45 மாணவர்கள் பாதிப்பு

    By DIN  |   Published on : 11th March 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 45 பேர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    கலசப்பாக்கத்தை அடுத்த வீரளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 158 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
    இவர்களில், 45 மாணவ, மாணவிகளுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாம். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரவி வருவதால், கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை சுகாதாரத் துறை அதிகாரிகள் பள்ளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai