சுடச்சுட

  

  கோவை ஈஷா யோகா மையத்தைக் கண்டித்து, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  திருவண்ணாமலை, பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எம்.ரவி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், மாவட்டச் செயலர் எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலர் ப.செல்வன், மக்கள் புரட்சிக் கழக மாநிலத் தலைவர் எம்.வர்கீஸ், அம்பேத்கர் பேரவை மாநிலச் செயலர் சி.ஏழுமலை ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோவை ஈஷா யோகா மையம் என்ற பெயரில் தலித், பழங்குடியினரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதை தமிழக அரசு மீட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
  மேலும், நில மீட்புக்காக போராடிய தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
  இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai