சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே தையல் தொழிலாளியை அடித்துக் கொன்றதாக மனைவி உள்பட மூவரை போலீஸார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி ரமேஷ் (35). இவரது மனைவி சரண்யா (30). இந்தத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சரண்யா கடந்த செவ்வாய்க்கிழமை சென்றாராம்.
    புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் ரமேஷின் வீடு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த ரமேஷின் தாய், சரண்யா ஆகியோர் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, ரத்த காயங்களுடன் ரமேஷ் இறந்து கிடந்தார். இதுகுறித்து மங்களம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
    சாலை மறியல்: இதற்கிடையே, பிரேத பரிசோதனை முடிந்து ரமேஷின் சடலம் அவரது உறவினர்களிடம் வியாழக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை வாங்கிச் சென்ற உறவினர்கள், மங்கலத்தில் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    மனைவி உள்பட மூவர் கைது: இதையடுத்து, போலீஸார் தங்களது விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில், ரமேஷின் மனைவி சரண்யா, அவரது ஆண் நண்பர் கார்த்திக் (35), சரண்யாவின் அண்ணன் ஜெய்சங்கர் (36) ஆகியோர் சேர்ந்து ரமேஷை கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் ரமேஷை கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, சரண்யா, கார்த்திக், ஜெய்சங்கர் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது
    செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai