சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் 545 மரங்கள் வெட்ட எதிர்ப்புத் தெரிவித்து, மலை சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழு சார்பில் வெள்ளிக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை, அண்ணா சிலை அருகே வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், சேவை அமைப்புகள், இளைஞர்கள், மலை சுற்றும் பாதை சூழல் பாதுகாப்புக் குழுவினர் கலந்துகொண்டனர்.
    அப்போது, சோணநதி காட்டில் 545 மரங்களை வெட்டிவிட்டு யாத்ரி நிவாஸ் (பக்தர்கள் தங்கும் விடுதி) கட்ட எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    இதற்கிடையே, இந்தத் திட்டத்தை அறநிலையத் துறை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai