சுடச்சுட

  

  மாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

  By DIN  |   Published on : 11th March 2017 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமியையொட்டி, சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
  திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
  மாசி மாத பவுர்ணமி:
  மாசி மாத பவுர்ணமியையொட்டி, சனிக்கிழமை (மார்ச் 11) இரவு 8.58 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) இரவு 8.52 மணி வரை பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி, சனிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் பலர் கிரிவலம் வரத் தொடங்கினர்.
  இரவு 9.30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கிரிவல பக்தர்கள் நலன் கருதி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
  நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரைச் சுற்றி 9 இடங்களில் தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பேருந்து நிலையங்களில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai