சுடச்சுட

  

  மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப் பதிவு

  By DIN  |   Published on : 11th March 2017 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கம் அருகே மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
  செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக உள்ளார். சென்னசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் மணலை அள்ளி, வாகனங்களில் கடத்துவதாக அந்தப் பகுதி மக்கள் குமரேசனிடம் தகவல் தெரிவித்தனராம். அதனடிப்படையில், மணல் கடத்தலை தடுக்கும் விதமாக வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் குமரேசன் தகவல் தெரிவித்தார்.
  இதையடுத்து, ஏரிக்கு சென்ற அதிகாரிகள், மணல் கடத்தலை தடுத்து நிறுத்தனர்.
  இதைத் தொடர்ந்து, மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததற்காக குமரேசனை சென்னசமுத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
  இதுகுறித்து செங்கம் காவல் நிலையத்தில் குமரேசன் புகார் அளித்ததன்பேரில், கோபி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai