மின்னல் தாக்கி சிறுவன் சாவு
By DIN | Published on : 11th March 2017 11:41 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவண்ணாமலை அருகே மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன், உடல் கருகி இறந்தான்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த மன்சுராபாத் கிராமம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தர் (37). இவர், தனது நிலத்திலேயே வீடு கட்டி குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மகன் கரண் (6), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
சனிக்கிழமை (மார்ச் 11) மாலை கரண், நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென இடி-மின்னலுடன் கூடிய கன பலத்த மழை பெய்தது. பயந்துபோன சிறுவன் கரண், வீட்டுக்கு ஓடினான். அப்போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன், அதே இடத்தில் இறந்தான். இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.