Enable Javscript for better performance
ஓபிஎஸ் அணி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியில் சனிக்கிழமை ஓபிஎஸ் அணியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
    இந்தக் கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி தலைமை வகித்து, பேசியதாவது:
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், ஓபிஎஸ் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர், பொதுமக்கள் தன்னிச்சையாக கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இது எழுச்சிப் போராட்டமாக அமைந்தது.
    அதிமுக என்பது ஓபிஎஸ் தலைமையிலான அணிதான். இரட்டை இலை நமது அணியினரிடம் தான் உள்ளது. இன்னும் 15 நாள்களில் அதிமுக ஓபிஎஸ் கைவசம் வந்துவிடும். வரும் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணிவேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
    அப்போது, மாவட்டப் பொருளாளர் சுபாஷ்சந்திரபோஸ், ஒன்றியச் செயலர் பி.ஆர்.ஜி.சேகர், நகரச் செயலர் அசோக்குமார், முன்னாள் மாவட்டச் செயலர் பையூர் எ.சந்தானம், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் வேலு, மாவட்ட இலக்கிய அணி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai