சுடச்சுட

    

    ஆரணியில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில், நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் அட்டை வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில் வங்கியின் நிர்வாக இயக்குநர் உஷாஆனந்தசுப்பிரமணி பங்கேற்று பேசியதாவது:
    நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்கி வருகிறோம். நெசவாளர் ஒருவருக்கு ரூ.50,000 வீதம் கடன் வழங்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.10 நாணயங்களை பெற்றுக் கொள்கிறோம் என்றார்.
    விழாவில் ஆரணியைச் சேர்ந்த நெசவாளர்கள் 89 பேருக்கும், வேலூரைச் சேர்ந்த 71 பேருக்கும், வந்தவாசியைச் சேர்ந்த 35 பேருக்கும், போளூரைச் சேர்ந்த 25 பேருக்கும், பள்ளிகொண்டாவைச் சேர்ந்த 19 பேருக்கும் என மொத்தம் 239 நெசவாளர்களுக்கு ரூ.ஒரு கோடியே 14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.
    இதில் சென்னை மண்டல மேலாளர் வினோத்தேஷி, சென்னை மண்டல துணை மேலாளர் நந்தகுமார், ஆரணி கிளை மேலாளர் கல்லியாணசுந்தரம் மற்றும் ஆரணி பகுதி நெசவாளர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai