சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே மின்னல் பாய்ந்ததில் சிறுவன், உடல் கருகி உயிரிழந்தார்.
    திருவண்ணாமலை மாவட்டம், மங்கலத்தை அடுத்த மன்சுராபாத் கிராமம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் விவசாயி சுந்தர் (37). இவர், தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
    இவரது மகன் கரண் (6), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.
    கரண் வெள்ளிக்கிழமை மாலை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென இடி - மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. பயந்துபோன கரண் வீட்டுக்கு ஓடியபோது, அவர் மீது மின்னல் பாய்ந்தது.
    இதில் பலத்த காயமடைந்த கரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, மங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai