Enable Javscript for better performance
48 நாள் முகாம் 30 நாட்களிலேயே முடிந்தது: திருவண்ணாமலை திரும்பியது கோயில் யானை ருக்கு- Dinamani

சுடச்சுட

    

    48 நாள் முகாம் 30 நாட்களிலேயே முடிந்தது: திருவண்ணாமலை திரும்பியது கோயில் யானை ருக்கு

    By DIN  |   Published on : 12th March 2017 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் 48 நாட்கள் நடைபெறவேண்டிய கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் 30 நாளிலேயே முடிவடைந்தது.
    இதையடுத்து, சனிக்கிழமை கோயிலுக்கு திரும்பிய திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்குவுக்கு, சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கோயில், மடங்களுக்குச் சொந்தமான யானைகளுக்கான 48 நாட்கள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான முகாம் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கியது.
    ஆனால், தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக 48 நாள் முகாம், 30 நாளிலேயே முடிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து யானைகளும் அந்தந்த கோயில்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் யானை ருக்குவும், சனிக்கிழமை (மார்ச் 11) திருவண்ணாமலைக்கு அழைத்து வரப்பட்டது.
    சிறப்புப் பூஜை:
    இதையடுத்து, கோயிலில் யானை ருக்குவுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், மேள-தாளங்கள் முழங்க ஓய்வு அறைக்கு யானை ருக்கு அழைத்துச் செல்லப்பட்டது. முன்னதாக நடைபெற்ற சிறப்புப் பூஜையில் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai