Enable Javscript for better performance
ஆதனூரில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த ஆதனூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
    தமிழகத்தின் சுற்றுச்சூழல், விவசாயம், நிலத்தடி நீர் பாதிப்புக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டது.
    இந்நிலையில், சீமைக் கருவேல மரங்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆதனூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மேலும், அந்தக் கிராமத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
    இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி வட்டாட்சியர் தமிழ்மணி கலந்துகொண்டார். மேலும், சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் கே.வேலுமணி, ஆரணி வட்டக் கிளைத் தலைவர் கே.வெங்கட்ரமணன், வட்டச் செயலர் எஸ்.ஜெயச்சந்திரன், வட்டப் பொருளர் ஆர்.கோபால், அமைப்புச் செயலர் எம்.தண்டபாணி, இணைச் செயலர் ஜி.விநாயகம், துணைச் செயலர் பி.ரமேஷ், சீமைக் கருவேல மரம் அகற்றும் போராட்டக்குழுத் தலைவர் ஜி.ராமச்சந்திரன் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai