Enable Javscript for better performance
இராட்டிணமங்கலத்தில் காளை விடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காளை விடும் விழா நடைபெற்றது.
    விழாவை முன்னிட்டு, முன்னதாக ஸ்ரீவிநாயகர் பூஜை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காளைகளுக்கு அட்டைகள் வழங்கும் பணியை நடத்தி, அன்ன தானம் வழங்கினர்.
    பின்னர், காளை விடும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை இளைஞர்கள் அடக்கினர்.
    இதில் அடக்கப்படாத காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.35 ஆயிரம், 2-ஆவது பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் பீரோ, சைக்கிள், கட்டில் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
    விழாவைக் காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியிருந்தனர். விழா ஏற்பாடுகளை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai