சுடச்சுட

  

  ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம்

  By DIN  |   Published on : 13th March 2017 09:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போளூரில் ஊரக வளர்ச்சித் துறை கணினி உதவியாளர்கள் சங்க செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்டத் தலைவராக குமரேசன், மாவட்டச் செயலராக ராமன், பொருளராக கருணாநிதி, துணைத் தலைவர்களாக யுவராஜன், ஸ்ரீமதி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும், இணைச் செயலர்களாக சுந்தரம், உமா, வில்வநாதன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
  கூட்டத்தின்போது, ஊரக வளர்ச்சித் துறையில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் பணிபுரியும் அனைத்து கணினி உதவியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு நடத்தி, இளநிலை உதவியாளர்களாக ஈர்த்துக்கொள்ள ஒப்புதல் அளித்து ஓராண்டு காலம் ஆகியும் அரசாணை வெளியிடப்படாமல் நிலுவையில் உள்ளது. இதற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். பணிச்சுமையைக் குறைக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலர் ராமன், பொருளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் யுவராஜ் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கணினி உதவியாளர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai