சுடச்சுட

  

  வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு, இந்திய மருத்துவ சங்கம், வந்தவாசி ரோட்டரி சங்கம் உள்ளிட்டவை சார்பில், சட்ட விழிப்புணர்வு மற்றும் இலவச மருத்துவ முகாம் வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  இந்தக் கிராமத்தில் உள்ள திரும்பூண்டி ந.முனுசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு வந்தவாசி முதன்மை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும், வந்தவாசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான கா.நிலவரசன் தலைமை வகித்து, சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினார். மேலும், மருத்துவ முகாமை அவர் தொடக்கி வைத்தார். வந்தவாசி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.
  டாக்டர்கள் எஸ்.குமார், ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பொதுமக்கள் 300 பேருக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் வந்தவாசி சிறப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் எ.சுபாஷ்சந்தர், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பி.வெங்கடேசன், வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் எஸ்.சையத்ரஷீத், ரோட்டரி சங்கத் தலைவர் நித்தியானந்தன், பள்ளித் தமிழ் ஆசிரியர் பி.நரசிம்மன் மற்றும் வழக்குரைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai