சுடச்சுட

  

  செங்கத்தில் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு

  By DIN  |   Published on : 13th March 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  செங்கம் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன . எனவே, இவற்றைப் பிடித்து அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
  செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட துக்காப்பேட்டை, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், காய்கனி மண்டி, போளூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் கூட்டம், கூட்டமாக மாடுகள் சாலையில் சுற்றித் திரிகின்றன.
  மேலும், நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான போளூர் சாலை, உழவர் சந்தை, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மாடுகள் கூட்டமாக படுத்துவிடுகின்றன.
  அப்போது, அவைகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டு, அருகில் இருக்கும் வானகங்கள் மீது மோதுவதுடன், சாலையில் செல்லும் வாகனங்கள் மீதும் மோதுவதால் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்க நேரிடுகிறது. இதனால் மாடுகளும் காயமடைகின்றன.
  எனவே, செங்கம் பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையும் செங்கம் நகரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai