சுடச்சுட

    

    வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில், திருவிளையாடல் புராண தொடர் விரிவுரை வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பேரவை அமைப்பாளர் அ.வே.முனுசாமி தலைமை வகித்தார். நாகம் எய்த படலம், மாயப் பசுவை வதைத்த படலம், மெய்க் காட்டிட்ட படலம் உள்ளிட்ட தலைப்புகளில் புலவர் செங்கழுநீ.சரவணன் சிறப்புரை ஆற்றினார்.
    பேரவை கௌரவ ஆலோசகர் ஆ.பூங்காவனம், செயற்குழு உறுப்பினர்கள் சு.காளத்தி, செ.வேங்கமுத்து, சாமி.கபிலன், அ.பெ.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai