சுடச்சுட

    

    உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றதையொட்டி, கலசப்பாக்கம் ஒன்றியத்தில் சனிக்கிழமை இரவு பொதுமக்களுக்கு அந்தக் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது.
    இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் கலசப்பாக்கம், வெங்கிட்டம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஒன்றியத் தலைவர் தங்கராஜ் மற்றும் அந்தக் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்ததுடன், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட விவசாய அணித் தலைவர் பழனி, ஒன்றிய விவசாய அணித் தலைவர் அருள்முருகன், ஒன்றிய நிர்வாகிகள் பசுபதி, திருவேங்கிடம், சங்கர், மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai