சுடச்சுட

  

  வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தினால் கடும் நடவடிக்கை: ஆரணி நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 13th March 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வீட்டு குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரணி நகராட்சி ஆணையாளர் கோ.கமலக்குமாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆரணி நகராட்சியின் நீராதாரங்களான தச்சூர் மற்றும் கமண்டல நாகநதி ஆகிய இரு இடங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.
  இதனால் ஆரணி நகராட்சி மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் மற்றும் சிறுமின் விசை மோட்டார் பொருத்தப்பட்ட ஆழ்துளை கிணற்றிலிருந்து பெறப்படும் தண்ணீரை கோடை காலத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
  மேலும், வீட்டுக் குடிநீர் இணைப்புகளில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் எடுத்தால் மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai