Enable Javscript for better performance
எழுத்தாளருக்கு "சிறுகதை தாரகை' விருது- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாருக்கு "சிறுகதை தாரகை' விருது அண்மையில் வழங்கப்பட்டது.
    வேலூர் ஊரிசு கல்லூரியில் மகளிர் தின விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாளிதழ்கள், வார இதழ்களில் சிறுகதை எழுதியதற்காகவும், சிறுகதை நூல் வெளியிட்டமைக்காகவும் ஆரணியைச் சேர்ந்த எழுத்தாளர் பவித்ரா நந்தகுமாருக்கு "சிறுகதை தாரகை' விருதை கல்லூரியின் முதல்வர் எஸ்.எழில் கிறிஸ்ட்தாஸ் வழங்கி கெளரவித்தார்.
    நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர்கள் இ.ஆர்.எஸ்.குமார், எம்.ஜெய செல்வதாஸ், நிதியாளுநர் ஐ.ஸ்டேன்லி ஜோன்ஸ், கேப்டன் மணிவண்ணபாண்டியன், இன்ப எழிலன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வி.ருக்மணி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai