Enable Javscript for better performance
குடிநீர் வழங்கக் கோரி அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்- Dinamani

சுடச்சுட

    
     


    தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள கொழுந்தம்பட்டு ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடக்கி வைக்க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அந்தக் கிராமத்துக்குச் சென்றார்.
    சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியைத் தொடக்கி வைத்த பின்னர், அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் வந்து அமர்ந்தார். அப்போது ஐதாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென அங்கு வந்து அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்டனர்.
    அப்போது அவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லை. எனவே, குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    உரிய அதிகாரிகளிடம் கூறி முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததன் பேரில், மக்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai