சுடச்சுட

  

  திருவண்ணாமலை அருகே உள்ள மெய்யூர் ஓம்சக்தி நகரில் குடிநீர் வழங்கக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவப் பெண்கள் மாவட்ட ஆட்சியரகம் எதிரே காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மெய்யூர் ஊராட்சிக்கு உள்பட்ட ஓம்சக்தி நகரில் 65-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த 320 பேர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தற்போது வறட்சியின் காரணமாக ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டதாம். இதனால் குடிநீருக்கு அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
  எனவே, தங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிய போர்வெல் அமைத்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று பலமுறை ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.), தனி அலுவலர் ஆகியோருக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகம் எதிரே காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர்.
  அதனைத் தொடர்ந்து ஆட்சியரகத்தில் திரண்டிருந்த நரிக்குறவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai