சுடச்சுட

    

    தர்மநாதேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி சுவாமி வீதியுலா

    By DIN  |   Published on : 14th March 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேத்துப்பட்டை அடுத்த மண்டகொளத்தூர் ஊராட்சியில் உள்ள தர்மநாதேஸ்வரர் கோயிலில் மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு  சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
    மண்டகொளத்தூர் ஊராட்சியில் மிகவும் பழைமை வாய்ந்த சிவன் கோயிலான  தர்மநாதேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகத்தில் உற்சவம் நடைபெறும். அதன்படி நிகழாண்டு நடைபெற்ற உற்சவத்தையொட்டி, தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.
    வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட தர்மநாதேஸ்வரர் சமேத பார்வதி அம்மன் வீதி உலா வந்து காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai